சினிமா செய்திகள்

விசில் ஊதி சூரியனையே அனைத்து புதிய அரசு விடிகிறது! - நடிகர் பார்த்திபன்

இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள ரியல் ஹீரோ-வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்! என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது. நொடிக்கு, நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே த.வெ.க. முன்னிலை வகித்தது. நேரம் செல்ல, செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது.

108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(த.வெ.க.) 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், நடிகர் பார்த்திபன் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அனைத்து ’happy birthday’ சொல்வதைப்போல, விசில் ஊதி சூரியனையே அனைத்து புதிய அரசு விடிகிறது! .. விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்… ஆனால்,ஜெயம் விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில் முதல்வராக அமர, விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள ரியல் ஹீரோ-வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்!" என்று தெரிவித்துள்ளார்.