சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய விஜய்யின் தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை காட்டியது. இதையடுத்து, நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மற்றும் மக்கள் மத்தியில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் “மிகவும் அழகான முதல்வருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் ” என்று பதிவிட்டுள்ளார். விஜய் மற்றும் இயக்குனர் சிம்பு தேவன் கூட்டணியில் உருவான ‘புலி’ படத்தின் புகைப்படத்தை ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.