சினிமா செய்திகள்

பாலிவுட் லெஜண்ட் மதுபாலா பயோபிக்… லீடு ரோலில் சாரா அர்ஜுன்?

மதுபாலாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

இந்தி திரையுலகின் பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற நடிகையான மதுபாலாவின் (Madhubala) வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் மதுபாலாவின் கதாபாத்திரத்தில் நடிகை சாரா அர்ஜுன் (Sara Arjun) நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜஸ்மீத் கே ரீன் (Jasmeet K Reen) இப்படத்தை உள்ளதாகவும், சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது படம் முன் தயாரிப்புப் பணிகளில் (Pre-production) இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் 'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சமீபத்தில் இந்தியில் 'துரந்தர்' (Dhurandhar) படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் சாரா அர்ஜுன்.