சினிமா செய்திகள்

காவிரி நீர் விவகாரம்: "விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்பேன்" - நடிகை ரம்யா

நடிக ரம்யா சமூக பிரச்சினைக்கு எதிராக சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை கூறி வருகிறார்.

காவிரி பிரச்சினை என்று வரும் போது விவசாயிகளுக்கு துணை நிற்பது எனது பொறுப்பு. எனவே முழுஅடைப்பு போராட்டத்துக்கு எனது ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று நடிகையும், முன்னாள் எம்பியுமான ரம்யா தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. இவர் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.

போராட்டத்துக்கு நடிகை ரம்யா ஆதரவு

தற்போது கன்னட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சமூக பிரச்சினைக்கு எதிராக சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை கூறி வருகிறார். இந்த நிலையில் காவிரி நதி நீர் பிரச்சினையில் வருகிற 13-ந்தேதி கன்னட அமைப்புகள் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு நடிகை ரம்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு துணை நிற்பேன்

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், நான் மண்டியாவை சேர்ந்தவள். காவிரி பிரச்சினை என்று வரும் போது விவசாயிகளுக்கு துணை நிற்பது எனது பொறுப்பு. எனவே முழுஅடைப்பு போராட்டத்துக்கு எனது ஆதரவு நிச்சயம் இருக்கும். நான் கடந்த காலங்களில் காவிரி தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். விவசாயிகளின் நலன் சார்ந்த பிரச்சினை வரும் போது நான் எந்த தயக்கமும் இன்றி அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என்றார்