சினிமா செய்திகள்

'கருப்பு' படத்திற்கு "யு/ஏ" சர்டிபிகேட் வழங்கிய தணிக்கை வாரியம்

கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சென்னை,

இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக தயாராகியுள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் திரிஷா இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காவல் தெய்வமான கருப்புசாமியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். வரும் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படக்குழு புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை திரையரங்குகளில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT