பிரபல மலையாள நடிகையான அன்னா ராஜன் சமீபத்தில் கேரளாவில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் அன்னா ராஜன் பொங்கலிட்டு வழிபட்டார். அப்போது அவர் கவர்ச்சியாக சேலை அணிந்ததும், உடல் அங்கங்கள் தெரியும்படி கோவில் வளாகத்தில் நடந்து சென்றது சர்ச்சையானது. வழிபாட்டு தலத்தில் இப்படியா? என்று கண்டனங்களும் வலுத்தன. இதனைத்தொடர்ந்து அன்னா ராஜன் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அனைத்துமே தற்செயலாகவே நடந்தது என்று விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அன்னா ராஜன் ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாகவே இருக்கிறாராம். கவர்ச்சி காட்டாத உடைகளையே அவர் தேர்வு செய்கிறாராம். மேலும் உடையை சரிசெய்வது உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் செல்போன்கள் இல்லாத திசையிலேயே வைத்துக் கொள்கிறாராம். முகம் சுழிக்காதபடி நடந்துகொள்ளவேண்டும் என்பதில் மிகவும் உஷாராக இருக்கிறாராம்.
பொதுவெளியில் எப்போதும் மனம் திறந்து பேசும் அன்னா ராஜனின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால் சமூக வலைதளத்தில் ரசிகர்களுக்காக அவர் வெளியிடும் படங்களில் எந்த பிரச்சினையும் இல்லை. வழக்கம்போலவே ரசிகர்களுக்கு அவர் தரிசனம் தருகிறார். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' படத்தில் அன்னா ராஜன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.