சினிமா செய்திகள்

சன்னி தியோலின் 'லாகூர் 1947' பட தலைப்பில் மாற்றம்!

லாகூர் 1947 என்கிற டைட்டிலை வைத்தால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்பதால் புதிய டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர்.

அமீர்கான் தயாரிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாகூர் 1947'. இதில் நாயகனாக சன்னி தியோல் நடித்துள்ளார். இப்படம் இந்தியப் பிரிவினையை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய திரைப்படமாகும்.

இதில் சன்னி தியோலுடன் பிரீத்தி ஜிந்தா, ஷபானா ஆஸ்மி, மற்றும் கரண் டிவோல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 13ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீர் மாற்றமாக படத்தின் தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, லாகூர் என்பது பாகிஸ்தானில் உள்ள நகரம் என்பதால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் லாகூர் 1947 என்கிற டைட்டிலை வைத்தால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்பதால் படக்குழுவினர் இந்த படத்திற்கு பத்வாரா 1947 என்ற புதிய டைட்டில் வைத்துள்ளனர். பத்வாரா என்பது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT