சினிமா செய்திகள்

தமிழில் வெளியாகும் “சத்தா பச்சா”

மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் ‘சத்தா பச்சா’ படம் தமிழில் வரும் 6ம் தேதி வெளியாகிறது.

அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள மலையாள படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல் மலையாள திரைப்படமான ‘சத்தா பச்சா’ கடந்த 22ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் மம்முட்டி, துல்கர் சல்மான் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான முதல் டிக்கெட்டை நடிகர் மோகன்லால் வாங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டது. மலையாளத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மலையாளத்தில் வரவேற்பை பெற்று வரும் ‘சத்தா பச்சா’ படம் தமிழிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நெருக்கடிக்கு மோடி பணிந்துவிட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்

தென்னை விவசாயத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு

சட்டத்தை மதிக்க முடியாவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேறுங்கள்: வாட்ஸ்அப்பிற்கு சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

மக்களவையில் அமளி: மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

பட்ஜெட் 2026-27: சாமானிய மக்களுக்கு என்ன பலன்கள்.. எதெல்லாம் விலை குறையும்?