சினிமா செய்திகள்

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரனின் “நம்ம கே.பாக்​ய​ராஜ்” அணி​ வெற்றி

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வி.சி.குகநாதனின் ‘திரைக்​கதை மன்​னன் கே.பாக்யராஜ்’ என்ற அணி​யும் சேரனின் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ அணி​யும் போட்​டி​யிடு​கின்​றன.

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​க தேர்தலில் சேரனின் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ அணி​ வெற்றி பெற்றுள்ளது.

மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் சேரன். திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னைக்குக் குடியேறியவர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான ‘புரியாத புதிர்’ படத்திலிருந்து அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களில் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘தேசிய கீதம்’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘பாண்டவர் பூமி’ எனத் தொடர்ந்து தரமான படைப்புகளாய் கொடுத்து ரசிகர்கள் விமர்சகர்கள் மனங்களில் மதிப்புக்குரிய படைப்பாளுமையாக நிலைத்து நின்றார் சேரன்.

‘ஆட்டோகிராப்’, ‘தவமாய் தவமிருந்து’ஆகிய திரைப்படங்கள் சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்த்தன. தங்கர் பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் கதாநாயகனாக நடித்த சேரன் முதல் படத்திலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’, ஜெகனின் ‘ராமன் தேசிய சீதை’, மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன்.

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​கத்​துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடத்​தப்​படு​வது வழக்​கம். பழைய நிர்​வாகி​களின் பதவி காலம் முடிவடைந்​த​தால், கடந்த 12ம் தேதி தேர்​தல் நடை​பெற இருந்​தது. இச்​சங்​கத்​தின் தலைவராக இருந்த கே.​பாக்​ய​ராஜ் மறைவை அடுத்து தேர்​தல் தள்ளி வைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இச்​சங்​கத்​தின் தேர்​தல், இன்று சென்னையில் நடை​பெறுகிறது. தலை​வர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலை​மை​யில் ‘திரைக்​கதை மன்​னன் கே.பாக்யராஜ்’ என்ற அணி​யும் சேரன் தலை​மை​யில் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ என்ற அணி​யும் போட்​டி​யிடு​கின்​றன. இரு அணிகளும் கே.​பாக்​ய​ராஜ் பெயரிலேயே போட்​டி​யிடு​கின்​றன.

இந்நிலையில், தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் சேரனின் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ அணி​ 12 தபால் வாக்குகள் உட்பட 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு நம்ம கே.பாக்யராஜ் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர்கள் சமுத்திரக்கனி, சினேகன் வெற்றி பெற்றுள்ளனர்.