சென்னை,
இன்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று பிறந்தநாள் காணும் இந்திய தேசத்தின் இன்றைய திராவிட சித்தாந்த அரண்,நம் தமிழநாட்டின் ஒப்பற்ற முதல்-அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.