கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு கோர்ட்டில் நாளை விசாரணை

கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

செங்கல்பட்டு,

முதல்-அமைச்சர் விஜய், அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர இருக்கிறது.