மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என தற்போது பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார். கடைசியாக சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, ‘கூலி’ படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாடியிருந்தார். ‘ஜன நாயகன்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. பூஜா ஹெக்டேவின் ‘ஹாய் ஜவானி டோ இஷ்க் ஹோனா ஹாய்’ என்ற இந்தி படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் சாலையோர காய்கறி வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு பெண்ணுடன் அவர் எடுத்துக்கொண்ட 'செல்பி' வைரலானது. இது குறித்து அவர் கூறும்போது, “திரையுலகினரை வாழ வைப்பது ரசிகர்கள்தான். அப்படி எங்களை வாழவைக்கும் ரசிகர்களிடம் ஏற்றத்தாழ்வுடன் பார்த்தது கிடையாது. சூழ்நிலை காரணமாக, சில மேடைகளில் ரசிகர்களை கண்டுகொள்ள முடியாமல் போகிறது. அதற்காக நாங்கள் கெத்து காட்டுகிறேன் என்று அர்த்தமில்லை. உண்மையிலேயே ரசிகர்கள் எங்கள் கடவுள். அவர்களை புறந்தள்ள யாருமே யோசிப்பது கிடையாது. சில வேளைகளில் தவறுகள் நடந்து முடிகிறது. அதை எங்கள் தரப்பில் இருந்து கொஞ்சம் யோசித்தால் மட்டும் போதும்” என்று குறிப்பிட்டார்.