கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

சினிமாவுக்கு உண்மையாக இருப்பதுதான் என் இலக்கு - ஆஷிகா ரங்கநாத்

கிசுகிசுக்களை பார்த்து சிரித்து மகிழ்வேன் என்று ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு படங்களில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஆஷிகா ரங்கநாத், தமிழில் 'பட்டத்து அரசன்', 'மிஸ் யூ', 'சர்தார் 2' படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கில் புதிய படங்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமாவுக்கு உண்மையாக இருப்பதுதான் என் இலக்கு என்று ஆஷிகா ரங்கநாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "இதுவரை பெரியளவில் மோசமான விமர்சனங்கள் எனக்கு வந்ததில்லை. அதுவரை எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனாலும் அவ்வப்போது வரும் கிசுகிசுக்களை பார்த்து சிரித்து மகிழ்வேன். எனக்கே தெரியாத விஷயங்கள் இவர்களுக்கு எப்படி தெரிகிறது? என்றும் யோசிப்பேன். அந்த வகையில் கிசுகிசுக்களை ரசித்து படிக்கும் ஆள் நான். இந்த சினிமா எனக்கு கொடுத்தது ஏராளம். அந்த சினிமாவுக்கு உண்மையாக இருப்பதுதான் என் இலக்கு", என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT