சென்னை,
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த முதல் படம் 3. அந்த படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறிடி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த பாடல் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி வெளியானது. இந்த நிலையில், தனது முதல் பாடல் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுகுறித்து சமூக வலைதளத்தில் அனிருத் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு;
”15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் எங்களது முதல் பாடல் வெளியானது. அதில் இருந்து எங்களது பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. 15 ஆண்டு கால இசை, நினைவுகள், மேஜிக். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் கோடிக் கணக்கான ரசிகர்களை அடைந்தேன். இன்டிபென்டன்ட் இசை, எங்களுக்கு பிடித்த சர்வதேச கலைஞர்களுடன் கூட்டணி, யார் பாட அழைத்தாலும் பாடுவது, பெரிய பிளாக்பஸ்டர்களில் அங்கமாக இருந்தது.
இந்த பயணத்தில் சில பெரிய இயக்குநர்கள், ஸ்டார்கள், தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் அன்பு சாதாரணது இல்லை. ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கூட்டணியும், சாதனைகள் எல்லாம் ஆசிர்வாதமே. 2026ம் ஆண்டில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜனநாயகன், டிசி, பாரடைஸ் மற்றும் ஜெயிலர் 2 படங்கள் வந்தன. 15 ஆண்டுகளை கொண்டாட என்னவொரு சிறப்பான வழி.
ஒவ்வொரு ஏற்றத்திலும், ஒவ்வொரு சவாலிலும், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் நாங்கள் தொடர்ந்து பயணித்து வருகிறோம்; இனியும் ஓய்வெடுக்கும் எண்ணம் இல்லை. இவை அனைத்தையும் தொடங்கி வைத்த அதே இசைக் காதல்தான் எங்களைத் தொடர்ந்து இயக்குகிறது. இப்போது எங்கள் மனதில் இருப்பது நன்றியுணர்வு மட்டுமே. எங்கள் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டவர்கள், கூடவே பாடியவர்கள், கொண்டாடியவர்கள், ஆதரவளித்தவர்கள் மற்றும் எங்களை நம்பியவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயணம் எங்களுக்கு எவ்வளவு சொந்தமானதோ, அதே அளவு உங்களுக்கும் சொந்தமானது. 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணற்ற நினைவுகள். துரத்துவதற்கு இன்னும் ஒரு மில்லியன் கனவுகள் உள்ளன. இப்போது மீண்டும் ஸ்டுடியோவிற்குத் திரும்புகிறோம், மிகச்சிறந்தவை இனிமேல்தான் வரவிருக்கின்றன. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், மிக்க நன்றி.”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.