சென்னை,
பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ள தேவா, 1990-ம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாமலை', 'பாட்ஷா', அஜித்தின் 'ஆசை', 'காதல்கோட்டை', விஜய்யின் ‘மின்சார கண்ணா’, 'குஷி' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் தேவா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசு விருது உள்ளிட்ட விருதுகளை தேவா பெற்றுள்ளார்