சினிமா செய்திகள்

‘விஜய பேரரசாக அரியணையை அலங்கரிக்கும் முதல்-அமைச்சருக்கு வாழ்த்துகள்’ - பார்த்திபன்

முதல்-அமைச்சர் விஜய்க்கு ஓவியம் ஒன்றை பார்த்திபன் பரிசளித்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய்யை, தினந்தோறும் அவரது அன்றாட பணிகளுக்கு நடுவே, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் ஒரு ஓவியத்தை விஜய்க்கு பரிசளித்தார். அந்த ஓவியம் முதல்-அமைச்சர் விஜய்யை ஒரு அரசர் போன்ற தோற்றத்தில், அரியணைக்கு அருகில் நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.

மேலும், பார்த்திபன் எழுதிய கவிதையும் அந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;-

“சினிமாயணம் to CMஆசனம்!

அராஜகமற்ற ஆட்சியைத் தர,

அரகஜா திலகமிட்டு - விஜய பேரரசராக

அரியணையை அலங்கரிக்கும் - உலக

அரசியல் அதிர்WIN முதல்வருக்கு

வாழ்த்துகள்!

பிரியருடன்,

பார்த்தியன்

தேதி: என்றும்!”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.