தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ரோஜா, அரசியலில் குதித்தார். எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளும் வகித்தார். தேர்தலில் தோல்வி கண்ட நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
சின்னத்திரையிலும் ஒரு சமையல் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இதற்கிடையில் ரோஜாவை, நடிகை வனிதா விஜயகுமார் சீண்டியுள்ளார்.
வனிதா விஜயகுமார் கூறும்போது, "ரோஜா என்னுடைய குடும்ப நண்பர் தான். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சமையல் கலை நிபுணருக்கான, சமையல் நிகழ்ச்சி நடுவர் இருக்கையில் அமர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வி எனக்குள் உண்டு. அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே உள்ள நடுவருக்கு அடுத்தபடியாக நடுவர் சீட்டில் அமர நான் தான் தகுதியானவள். ஏனெனில் நான் ஒரு செப்", என்று குறிப்பிட்டார்.