பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த காப்புரிமை வழக்கை, சோனி நிறுவனத்தின் கோரிக்கையின் பேரில் சென்னை ஐகோர்ட்டிலிருந்து மும்பை ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பான மனுவை நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் கே.சந்திரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, சோனி நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, மும்பை ஐகோர்ட்டில் முன்பே தொடர்புடைய உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளதால், அதன் பின்னர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் அங்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு எதிராக, இளையராஜா தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இளையராஜா தாக்கல் செய்த காப்புரிமை வழக்கை சென்னை ஐகோர்ட் டிலிருந்து மும்பை ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.