சினிமா செய்திகள்

மிகப்பெரிய வசூலில் ஆங்கிலம் அல்லாத சினிமாவில் 5-வது இடத்தை பிடித்து ’தங்கல்’ சாதனை

அமீர்கானின் ’தங்கல்’ மிகப்பெரிய வசூலில் ஆங்கிலம் அல்லாத சினிமாவில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் வாழ்க்கையை தழுவி, கடந்தாண்டு இந்தியாவில் வெளியான திரைப்படம் தங்கல். நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படம், இந்தியா மட்டுமின்றி கடந்த மே 5ஆம் தேதி சீனாவிலும் வெளியானது. இப்படத்தில் அமீர்கான் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் சீனாவில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

சீனாவில் தங்கல் படம் 7 ஆயிரம் தியேட்டர்களில், திரையிடப்பட்டு ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அமீர்கானின் தங்கல் இப்பேது ஒரு புதிய மற்றும் மிகச்சிறந்த மைல்கல் சாதனையை எட்டியுள்ளது, இந்த சாதனையை உலகில் நான்கு பிற திரைப்படங்களை மட்டுமே செய்து உள்ளன.

தங்கல் இந்த வாரம் 300 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து வரலாற்றில் ஐந்தாவது ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக உள்ளது.

பேர்ப்ஸ் பத்திரிகை செய்தியின்படி, விளையாட்டு வாழ்க்கை சினிமாவுக்கான டிக்கெட் விற்பனை இப்பேது $ 301 மில்லியனாக உள்ளது, இதில் 179.8 மில்லியன் டாலர் சீனாவில் இருந்தும் 84.4 மில்லியன் டாலர் இந்தியாவிலும் வசூலாகி உள்ளது.

உலகம் முழுவதும் ஆங்கிலம் அல்லாத 4 சினிமாக்களே 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலை குவித்து உள்ளன.

சீனாவின் தி மெர்மெய்ட் ( 533 மில்லியன் டாலர்), மான்ஸ்டர் ஹன்ட் (386 மில்லியன் டாலர்) , பிரான்சின் தி இன்டச்சபிள்ஸ் (427 மில்லியன் டாலர்) , ஜப்பானின் யுவர் நேம்(354 மில்லியன் டாலர்) ஆகிய படங்களாகும்