சென்னை,
கடந்த வாரம் கோவாவில் சுந்தர் சி., குஷ்பூ தம்பதியின் மகள் அவந்திகா-ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் நடந்தது. விழாவில் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திரிஷா, தமன்னா, உள்பட 80-ஸ் கால நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
திரிஷா திருமணத்திற்கு முந்தைய நாளே கோவா சென்று 4 நாட்கள் நடந்த திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் கோவாவில் நடைபெற்ற திருமண விழாவின் புகைப் படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
விழாவில் குஷ்பு புகைப்படத்தை திரிஷா பகிர்ந்து, முழுதாக நான்கு நாட்கள் எங்களை மிகுந்த அன்பிலும் மகிழ்ச்சியிலும் திளைக்க செய்ததற்கு என் குஷ் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு நன்றி. திருமண கொண்டாட்டங்கள் முடிந்தபிறகும் அந்த உணர்விலிருந்து இன்னும் மீள முடியவில்லை. என் அன்பிற்குரிய டாமி நாம் அடிக்கடி சந்தித்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.