பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன், தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு ரன்வீர் சிங், தீபிகா படுகோன் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு 2024ம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தது. அவளுக்கு ‘துவா’ எனப் பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் துவாவின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து இவர்களது மகள் பிரக்னன்சி கிட் உடன் போஸ் கொடுக்கும் போட்டோவை ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்ததும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரன்வீர் சிங் ‘துரந்தர் 2’ வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திவருகிறார். நடிகை தீபிகா படுகோன் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ‘ராகா’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.