சினிமா செய்திகள்

அவதூறு பதிவுகள்: சைபர் கிரைமில் புகாரளித்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா தன்னிடம் 100 தடவை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சியதாக விஜய் தேவரகொண்டா என்று கூறியதை விமர்சித்து வருகின்றனர்.

நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல சினிமா நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள் மற்றும் போலிச் செய்திகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுதொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் இவர்களின் பேட்டிக்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாகத் தொல்லைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்க மனநிலை

நடிகை ராஷ்மிகா தன்னிடம் 100 தடவை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சியதாக விஜய் தேவரகொண்டா என்று பேட்டியில் கூறியிருந்தார். விஜய் தேவரகொண்டாவின் கருத்தில் ஆணாதிக்க மனநிலை வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டி பல பெண்கள் அவரை விமர்சித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா தனது கருத்துகளை விரிவாகப் பகிர்ந்துள்ளார்.

போலிப் புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் தங்களை இலக்காகக் கொண்டு வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட உள்ளடக்கங்கள், மாற்றப்பட்ட திரைப்பிடிப்புகள் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபலங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர்களின் மேலாளர் நிஷாந்த் குமார் தலைமையிலான சட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆதாரங்கள் சமர்ப்பணம்

இந்த விவகாரம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் உலா வரும் அவதூறு பதிவுகளின் இணைப்புகள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் ஆகியவற்றைச் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் அந்தத் தரப்பு முறையாகச் சமர்ப்பித்துள்ளது. பிரபலங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இணையப் பாதுகாப்பின்மை ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை சினிமா வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.

டிஜிட்டல் முறைகேடுகள்

தற்போதைய காலகட்டத்தில் பிரபலங்கள் குறிவைக்கப்பட்டு மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் போலிச் செய்திகள் பரப்பப்படுவது அதிகரித்து வருவது திரையுலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT