சினிமா செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் கலக்க ஆசை - கைரா வாசுதேவன்

எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாள சினிமாவை விடமாட்டேன் என்று கைரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான 'கலீபா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் கைரா வாசுதேவன். தற்போது புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

இதுகுறித்து கைரா வாசுதேவன் கூறும்போது, "கலீபா படத்தின் வெற்றி எனக்கும் பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்தது எனக்கு பெருமையும் கூட. பெரிய நடிகர்களுடன் எப்படி நடிக்கப்போகிறோம்? என்ற அழுத்தம் எனக்குள் இருந்தது. ஆனால் பிருத்விராஜ், வைசாக் போன்றோர் என் அழுத்தத்தைப் போக்கி, அன்பாக பழகினார்கள். நம்பிக்கையும் அளித்தார்கள். அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாள சினிமாவை விடமாட்டேன். எனக்கு அதுதான் வீடு. நான் இப்போது வேறொரு மாநிலத்தில் இருப்பதாகவே உணரவில்லை. 'கலீபா' படக்குழுவினர் எனக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்தித் தந்துள்ளனர். அதேவேளை தென்னிந்திய மொழிகளில் கலக்கவும் எனக்கு ஆசை உள்ளது" என்று கூறினார்.