சினிமா செய்திகள்

தேவயானி மகள் நடிக்கும் “ப்ளாக் நைட் பாய்ஸ்” படத்தின் படப்பிடிப்பு பூஜை

செம்பர் வி. முருகேசன் இயக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தில் அமல் அஜித், பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கின்றனர்.

பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியரின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், சினிமாவில் நாயகியாக களமிறங்கி தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தபடம் திரைக்கு வரும் முன்பே தனது அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்கு ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஹீரோவாக அமல் அஜித் நாயகனாக நடிக்கிறார். டிவி தொடர்களில் நடித்து வந்த இவர் வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இப்படத்தை செம்பர் வி. முருகேசன் இயக்குகிறார்.

இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அழகான காதல் கதையுடன், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான பேமிலி என்டர்டெய்னராக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

SCROLL FOR NEXT