சினிமா செய்திகள்

'தனுஷ் 55' படம்: ரூ.35 கோடி வேண்டாம் என்ற மம்முட்டி- பின்னணி என்ன?

நடிகர் மம்முடிட்டியின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பேசபொருளாகி உள்ளது.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தனது 55-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக சாய்பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் 55-வது படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்தில் சாய் பல்லவிக்கு ரூ.12 கோடி சம்பளமும், ஸ்ரீ லீலாவுக்கு ரூ.3 கோடி சம்பளமும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீ லீலா வரும் காட்சிகள் குறைவு என்பதால் அவருக்கு இந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், நடிகர் மம்முடிட்டியின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பேசபொருளாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் நடிப்பதற்கு மம்முட்டிக்கு ரூ.35 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு பெரிய சம்பளத்தை நான் விரும்பவில்லை என அவர் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவருக்கு இறுதியாக ரூ.24 கோடி சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மம்முட்டியின் முடிவு திரை உலகினர் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.