நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் நடித்த ‘ராஞ்சனா’ என்ற திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியாகி 'ஹிட்' அடித்து, ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. தமிழில் ‘அம்பிகாபதி’என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
மீண்டும் ஆனந்த்.எல். ராய் இயக்கத்தில் ‘அத்ரங்கி ரே’ படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்து தனுஷ் நடித்த திரைப்படம் 2021-ம் ஆண்டில் வெளியானது. இந்த படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியானது.
நடிகர் தனுஷ், கிரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக இந்தியில் உருவான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். கடந்தாண்டு நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரகுமானின் பாடல்களால் வரவேற்பும் பெற்றது. இதனால், ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் உலகளவில் ரூ. 160 கோடி வரை வசூலித்து கடந்தாண்டின் வெற்றிப்படமானது.
இதனால், அம்பிகாபதி, கலாட்டா கல்யாணம், தேரே இஷ்க் மே ஆகிய படங்களை தொடர்ந்து, 4வது முறையாக தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4-வது முறையாக இணையும் இக்கூட்டணியின் படப்படிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படம் பீரியட் கால காதல், ஆக்ஷன் கதையாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.