தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளால் தனித்த இடத்தைப் பெற்றவர் தனுஷ். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பிசியான படப்பிடிப்பு பணிகளுக்கு மத்தியில் கூட, அவர் அவ்வப்போது ரசிகர்களை நேரில் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ரசிகர்களை தனுஷ் சந்தித்தார். அவரை பார்க்க பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். தனுஷை நேரில் கண்ட மகிழ்ச்சியில் குழந்தைகள் அவரை முத்தமிட்டும், ரசிகர்கள் கைகளை அசைத்து திருஷ்டி கழித்தது போல அன்பை வெளிப்படுத்தியும், கட்டிப்பிடித்தும் அன்புமழை பொழிந்தனர்.
மேலும், நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், அசைவ விருந்தும் ஏற்பாடு செய்து அனைவரையும் மகிழ்வித்தார் தனுஷ். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.