சினிமா செய்திகள்

'ரெட்ட தல' படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த தனுஷ்

மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் ரெட்ட படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ரெட்ட தல படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ் ரெட்ட படத்திற்கான விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதாவது, ரெட்ட தல படத்தின் முதல் 30 நிமிடத்தை பார்த்தேன். இந்த படம் அசாதாரண திரில்லராக உருவாகியுள்ளது. படம் ரொம்ப  நல்லா வந்திருக்கு. இந்த படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது. படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள். என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT