கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் போது பேசிய அமிதாப் பச்சன் தான் தனுஷின் தீவிர ரசிகன் என்று தெரிவித்தார்.
அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கவுன் பனேகா குரோர்பதி 18நிகழ்ச்சியில், பங்கேற்பாளர் ஒருவர் , தான் நடிகர் தனுஷின் தீவிர ரசிகர் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த அமிதாப் பச்சன், தானும் தனுஷின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், நீங்கள் தனுஷின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறினீர்கள். நம் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு அசாதாரணமான கலைஞர். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் முழுமையாக ஒன்றிவிடுவார். அவர் மிகச்சிறந்த நடனக் கலைஞரும் கூட என்று பாராட்டியுள்ளார்.
மேலும், 2015-ம் ஆண்டு வெளியான ‘ஷமிதாப்’ திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த அனுபவத்தையும் அமிதாப் பச்சன் நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தனுஷுடன் இணைந்து ‘ஷமிதாப்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அவரைப் பற்றி ஏற்கெனவே நிறைய கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அவரை நேரில் சந்தித்து, அவருடன் பணியாற்றி, அவரது நடிப்பைப் பார்த்தபோதுதான் அவரது திறமையை முழுமையாக உணர்ந்தேன். உண்மையிலேயே அவர் ஒரு அசாதாரணமான கலைஞர்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆர்.பால்கி இயக்கத்தில் உருவான ஷமிதாப் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் மூலம் அக்ஷரா ஹாசன் இந்தி திரையுலகில் அறிமுகமானார்