சினிமா செய்திகள்

தனுஷின் `கர' திரைப்படம்.. 2 நாட்களில் உலக அளவில் ரூ.20 கோடி வசூல்

இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது.

சென்னை,

‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 30ந் தேதி வெளியான படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரைகளில் வெளியான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கர திரைப்படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT