சினிமா செய்திகள்

தனுஷின் “ஓம்” திரைப்படத்தின் டைட்டில் மாற்றம்

தனுஷ், ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் நடிக்கும் ‘ஓம்’

‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நவம்பர் 20-ம் தேதி வெளியீடு

‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்த படத்தினை தியேட்டரில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

புதிய பாடல் வெளியீடு

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக இவரது இசையில் வெளியான 'அலாக்கா லோவா', 'வீழா வீரா', 'செஞ்சுடரே' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தின் அடுத்த பாடலான ‘ஃபா ஃபா ஃபா’ என்ற பாடல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. சாய் அபயங்கர், தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ள இப்பாடலை தமிழ் ஆதவன் எழுதியுள்ளார்.

‘ஓம்’ திரைப்படத்தின் டைட்டில் மாற்றம்

இந்த நிலையில், அறிவிப்பு வீடியோவில் ‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பில் சிற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

‘OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD’ என்று முதலில் வெளியான நிலையில், தணிக்கைக் குழு பிரச்சினைகளால், ‘ஓ.எம் ஆபரேஷன் மோல்’ என்று தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தணிக்கைக் குழுவின் சில எதிர்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக இந்தத் டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

SCROLL FOR NEXT