தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ் நாராயணன். இவர் தனுஷின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், அடுத்தடுத்த இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக நாகா துர்கா நடித்துள்ளார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தினேஷ் மற்றும் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளனர்.
செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.