சினிமா செய்திகள்

மரண வெயிட்டிங்.. தனுஷ் இயக்கும் 'ராயன்' படத்தின் அப்டேட்

ராயன் படத்தின் புதிய போஸ்டரில் தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் இந்த மூன்று கோம்போவில் எந்த கோம்போவுக்கு மரணம் வெயிட்டிங் என பதிவு செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் குறித்த ஒரு புதிய அப்டேட்டை பதிவு செய்துள்ளது. அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் தேர்தலுக்குப் பின்னர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், மற்றும் சந்திப் கிஷான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் மரண வெயிட்டிங் என்ற கேள்வி குறியுடன் ஒரு புதிய ஸ்டில் வெளியிட்டுள்ளது. 

அதில் தனுஷ் மற்றும் செல்வராகவன், தனுஷ் மற்றும் எஸ்ஜே சூர்யா, தனுஷ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷான் இந்த மூன்று கோம்போவில் எந்த கோம்போவுக்கு மரணம் வெயிட்டிங் என பதிவு செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.

SCROLL FOR NEXT