சினிமா செய்திகள்

தனுஷ் படத்தின் 2-ம் பாகம்

வடசென்னை 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தகவல் தெரிவித்து உள்ளார்.

தமிழில் எந்திரன், சண்டக்கோழி, சாமி, விஸ்வரூபம், வேலை இல்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சிங்கம், அரண்மனை 3 பாகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்தியன் 2-ம் பாகம் தயாராகிறது. இந்த நிலையில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2018-ல் வெளியான வடசென்னை 2-ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இதனால் வடசென்னை 2-ம் பாகம் உருவாகுமா அல்லது கைவிடப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் தனது இயக்கத்தில் விடுதலை, வாடி வாசல் ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும் இந்த படங்களை முடித்த பிறகு வடசென்னை 2-ம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்து உள்ளார். இது தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT