சினிமா செய்திகள்

கிராமி விருதுக்கான பரிசீலனையில் “துரந்தர்: தி ரிவெஞ்ச்” பட பின்னணி இசை

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்த ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படம் ரூ.1,800கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தின் பின்னணி இசைகளை கிராமி விருதுக்கான போட்டிக்கு அனுப்பியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தன.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. ரூ.1,800கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இசையமைப்பாளர் ஷஷ்வத் சச்தேவ்

இந்தப் படத்துக்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தார். பாடல்கள், பின்னணி இசை என படத்துக்கு கூடுதல் பலத்தை அளித்திருந்தார்.

சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. இவ்விருதுகளை அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாட்டினர்களே அதிகமாக பெற்று வருகிறார்கள்.

கிராமி விருதுக்கான பரிசீலனையில் “துரந்தர்: தி ரிவெஞ்ச்”

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான பி62 ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கிராமி விருதுக்கான பரிசீலனையில் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’. அனைத்து விதமான அன்புக்கும் நன்றி” எனக் கூறியுள்ளது.

இந்தப் படத்தினை சிறந்த பாடல் வரிகள், ஆசிய அளவிலான பாப், குளோபல் இசை, ராப், பாப், எலெக்ட்ரானிக் மியூசிக் என 9 பிரிவுகளில் கிராமி விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT