சினிமா செய்திகள்

பெண் குழந்தைக்கு தந்தையானார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை,

தனது கையில் குழந்தையின் பிஞ்சுக்கரங்களைப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த், 'அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன்' (Officially a Girl Dad) என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் அபிஷன் ஜீவிந்த்

கடந்த 2025-ம் ஆண்டு வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், இந்த ஆண்டு வெளியான 'வித் லவ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதில் அனஸ்வரா ராஜன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது சிவராஜ்குமார் நடிப்பில் கவுதம் சிவராமன் இயக்கி வரும் 'பிக்காசோ' திரைப்படத்தில் அபிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அடுத்த ஆண்டு மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

'பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன்'

இந்நிலையில், அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது கையில் குழந்தையின் பிஞ்சுக்கரங்களைப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த், 'அதிகாரப்பூர்வமாக ஒரு பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன்' (Officially a Girl Dad) என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், திரையுலகினரும் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலாம் ஆண்டு திருமண நாள்

அபிஷன் ஜீவிந்த் தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடினர். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். திருமண நாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே பெண் குழந்தை பிறந்திருப்பது தம்பதியின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT