சினிமா செய்திகள்

இயக்குநர் பாரதிராஜா மறைவு: நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து - தயாரிப்பாளர்கள் சங்கம்

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து நாளை (ஜூன் 11) அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

வீட்டிலேயே தீவிர சிகிச்சை

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ், கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக காலமானார். அதன்பிறகு, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.

அஞ்சலி செலுத்தும் திரையுலகம் மற்றும் அரசியல் தலைவர்கள்

சென்னை நீலாங்கரை இல்லத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் காலமானார். திரையுலக கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் அவரது இல்லத்துக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.

நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து

பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில், பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.