சினிமா செய்திகள்

சொந்த ஊர் கொண்டு செல்லப்படும் பாரதிராஜா உடல்

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

சென்னை,

இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பாரதிராஜா காலமானார்

வீட்டில் இருந்தபடியே டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார். பாரதிராஜா மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜாவின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் உள்ள காட்ரோட்டில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலாங்கரையில் இருந்து வாகனம் மூலம் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நாளை மாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.