2011-இல் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகர் குரு சோமசுந்தரம். பிறகு பல படங்களில் நடித்திருந்தார், குறிப்பாக இவர் கதாநாயகனாக நடித்த ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வெற்றிபெற்ற ‘ஜெய்பீம்’ படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் குரு சோமசுந்தரம் ‘பாரிஸ் கஃபே’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற செய்தியை, அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான 'குடும்பஸ்தான்' மற்றும் 'பாட்டில் ராதா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
‘பாரிஸ் கஃபே’ படம், நடுத்தர வயதுக் காதலை மையமாகக் கொண்ட ஒரு காதல் நாடகமாக விவரிக்கப்படுகிறது. இப்படத்தில் குரு சோமசுந்தரத்துடன் அனுமோல் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் விஜய் விஸ்வா மற்றும் அர்ச்சனா குமார் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை அறிமுக இயக்குநர் சரஜ் சீலன் இயக்கியுள்ளார் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட்டின் கண்மணி ரங்கநாதன் தயாரித்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சதீஷ் ஜி, இசையமைப்பாளர் கே, படத்தொகுப்பாளர் வி.கே. சாபு ஜோசப் மற்றும் கலை இயக்குநர் தாமு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ‘பாரிஸ் கஃபே’ படத்தின் ‘அழகழகாய் மனம்’ பாடலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.