சினிமா செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் விஜய்க்கு நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அசத்தலான உறுதியான வெற்றி விஜய் அண்ணா, உங்களின் புதிய பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர், லியோ படங்களில் நடித்துள்ளார்.