அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான அருந்ததி திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் ரூ.13 கோடி செலவில் உருவாக்கப்பட்டு 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.
பல்வேறு முன்னணி நாயகிகள் இந்தி ரீமேக் பணியில் நடிக்க ஆர்வம் காட்டினாலும், அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது. முதலில் தீபிகா படுகோன், கரீனா கபூர் உள்ளிட்ட பலர் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். இறுதியாக இப்போதுதான் இந்தி ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அருந்ததி இந்தி ரீமேக்கினை மோகன் ராஜா இயக்கவுள்ளார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. முதன்முறையாக நாயகியை முன்னிலைப்படுத்திய இந்தி படமாக அருந்ததி ரீமேக் சரியாக இருக்கும் என மோகன் ராஜா முடிவு செய்திருக்கிறார்.
2026 ஜனவரியில் அருந்ததி இந்தி ரீமேக் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.