சினிமா செய்திகள்

பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பா.ரஞ்சித்தின் “வேட்டுவம்” திரைப்படம் வரும் 2027 தை பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய 'அட்டகத்தி, கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இரவது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

வேட்டுவம்

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்து வருகின்றனர்.

அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்கிறார். இந்தப் படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது.

திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ

‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ , ‘வேர்ட் ஆப் வேட்டுவம்’ என்கிற பெயரில் வெளியானது.

அதிரடி ஆக்ஷனில் மிரட்டிய சோபிதா துலிபாலா

‘வேட்டுவம்’ படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல், மிகத் தீவிரமாக நடித்துள்ளார்.

‘வேட்டுவம்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

தற்காப்புக் கலையை மையமாகக் கொண்டு பா.ரஞ்சித் இயக்கியுள்ள விதம் ‘வேட்டுவம்’ திரைப்படம் வரும் 2027 தை பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT