சினிமா செய்திகள்

தனுஷுக்கு இயக்குநர் பார்த்திபன் வாழ்த்து

தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கப் பணிகளை பார்த்திபன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் உடனான சந்திப்பு குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

தனுஷ், தனது ரசிகர்களை மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, அவரது அரசியல் வருகை குறித்த ஊகங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

நடிகர் தனுஷ் தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் வெற்றி மாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், நடிகர் தனுஷை அவரின் இல்லத்தில் சந்தித்துள்ளார். மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் பகிரும் நிகழ்ச்சிக்கு அழைக்கும் நோக்கில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தில் பார்த்திபன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், “காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி நான்” என்று குறிப்பிட்டு தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கப் பணிகளை பார்த்திபன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அதில் “காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி நான்!பாரதிராஜா பாக்யராஜ் இருவருக்கும் நடக்கும் நினைவு உற்சவத்திற்கு அழைக்க சென்ற தினம் நண்பர் தனுஷின் பிறந்த நாளும் கூட! நாலும் கை கூட(நடிப்பு, இயக்கம் , தயாரிப்பு இன்னும்…..) அவரை வாழ்த்தினேன். “வணக்கம் சொன்னாக் கூட அதையும் வணக்க்கம்னு extra ‘க் ’ வைச்சு பேசுறது பார்த்திபன் சாருக்கு பழக்கம்” என திரு செல்வமணியிடம் என் குறும்பை விரும்பி சொன்னார். என் பார்வை அழகாக அலங்கரிக்கப்பட்ட அவர் பெற்ற விருதுகளின் மீதே! ” என்று கூறியுள்ளார்.

சமீப காலங்களில் தனுஷ் ரசிகர் மன்றத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஏரியா வாரியாக ரசிகர்களை வரவழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு உணவளித்து உபசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.