சினிமா செய்திகள்

நடிகர் டைகர் ஷெராஃப் தாக்குதல் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா விமர்சனம்

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு பற்றி இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியுள்ளார்.

நடிகர் கார் மீது துப்பாக்கிச்சூடு

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள புஷ்பா பார்க் அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாடிவிட்டு காரில் வீடு திரும்பியபோது, அவரது காரைக் குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். நடிகரின் பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ராஜஸ்தானில் 3 பேர் கைது

மும்பை மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரெயில் நிலையத்தில் புனே-ஜெய்ப்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த 3 சந்தேக நபர்களைப் பிடித்தனர். அவர்கள் நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன.

கேங்ஸ்டர் கும்பலுக்கு தொடர்பா?

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன. சல்மான் கானுடன் பணியாற்றும் நடிகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையுடன் இந்தத் தாக்குதலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ராம் கோபால் வர்மா விமர்சனம்

நடிகர் டைகர் ஷெராப் மீதான தாக்குதல் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார். அதில் “டைகர் ஷெராஃபுக்கு நடந்த விஷயம் இதுவரை நாம் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கொள்ளையடிக்கும் போதும் கூலிப்படைகளுக்காகவும் கட்டப்பஞ்சாயத்துக்களுக்காவும் கொலைகள் நடந்து வந்தன. தற்போது, முதல்முறையாக பெருமைக்காவும் தற்பெருமைக்காகவும் அவர்கள் கொலை செய்ய விரும்புகிறார்கள்” என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT