சினிமா செய்திகள்

இயக்குனர் சித்திக் மறைவு: டிரைலர் வெளியீட்டை தள்ளிவைத்த துல்கர் சல்மான் படக்குழு

இயக்குனர் சித்திக் மறைவையடுத்து துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்துள்ளது.

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இயக்குனர் சித்திக் மறைவையடுத்து இன்று வெளியாக இருந்த துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டிரைலர் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை தமிழில் நடிகர் சூர்யாவும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் வெளியிடுகின்றனர்.

SCROLL FOR NEXT