சினிமா செய்திகள்

திருமண நாளில் அஜித்தை நேரில் சந்தித்த இயக்குனர்கள் – வைரலாகும் புகைப்படம்

இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், ஏ.எல்.விஜய் ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதியாக அஜித் - ஷாலினி உள்ளனர். இருவரும் இணைந்து இயக்குனர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் என்ற படத்தில் நடித்த போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. அதனை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி சினிமா படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார்.

இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். கோலிவுட்டின் பேவரைட் ஜோடி என்றால் அது அஜித்தும், ஷாலினியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று (24ந் தேதி) அஜித் - ஷாலினி தம்பதியினர் தங்களின் 26வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். அவர்களுக்கு திரைப்பிரலங்கள் மற்றும் ரசிர்கள் வாழ்த்து தெரிவித்தினர். இந்த நிலையில், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், ஏ.எல்.விஜய் ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.