கோவை,
கோவையில் 'மீசைய முறுக்கு 2' திரைப்பட குழுவினர் இன்று (செப்டம்பர் 20) செய்தியாளர்களை சந்தித்தனர். திரைப்படத்தின் நடிகரும், இயக்குநரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகைகள் கேதிகா சர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன் மற்றும் நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது தமிழக அரசியல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆதி, “நான் தினமும் அரசியல் பேசுவது இல்லை என்பதால் எனக்கு அரசியல் விவகாரம் பற்றி கருத்து சொல்ல எதுவும் இல்லை. இருப்பினும் எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல் குறித்து பேசுவது ஆரோக்கியமானதுதான்” என்று தெரிவித்தார்.