சினிமா செய்திகள்

தீபாவளி பண்டிகை: ரசிகர்களை சந்தித்து வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

தீபாவளி

இந்து மத பண்டிகையான தீபாவளி இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாலையே குளித்து, புத்தாடை உடுத்தி, கோவில்களுக்கு சென்று கடவுள்களை வழிபட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளியையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன் திரண்ட ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் வழங்கிய பரிசுப்பொருட்களையும் நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

SCROLL FOR NEXT