சினிமா செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்.. இன்று மாலை வெளியாகும் 'தர்மன்' படத்தின் அப்டேட்

'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் புதிய அப்டேட் மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்'

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இப்படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து அறிவித்திருந்தார். தற்போது மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நயன்தாராவை தொடர்ந்து இணைந்த ஸ்ரீலீலா

இதற்கிடையில், சமீபத்தில் இப்படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது. மேலும், அவர்களின் அறிமுக வீடியோவையும் வெளியிட்டது.

மாலை வெளியாகும் அப்டேட்

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, இன்று கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் புதிய அப்டேட் மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

SCROLL FOR NEXT