சினிமா செய்திகள்

“திமுக - அதிமுக கூட்டணி? இது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது!” – விஷால் கடும் எதிர்ப்பு

திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், முழுமையான பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. இந்த சூழலில், திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன. இதற்கு நடிகர் விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு, த.வெ.க அல்லாத வேறு ஏதேனும் ஒரு தரப்பு குறிப்பாக, கற்பனைக்கே எட்டாததும் அதிர்ச்சியூட்டக் கூடியதுமான திமுக-அதிமுக கூட்டணி அதிகாரத்திற்கு வருமானால், ஒரு குடிமகனாகவும் வாக்காளனாகவும் நான் காண்கின்ற விளைவு, சாமானிய மக்கள் மத்தியில் பேரழிவுமிக்கதாகவும் விபரீதமானதாகவும் அமையும். இது எவருக்கும் சற்றும் ஏற்புடையதாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த கருத்து அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.